தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு செல்போன் சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சாதரணமாக செல்போனுக்கு சிம்கார்டுகள் வாங்கும் போது, புகைப்பட அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல் ஆகியவை வாங்கி வைத்துக் கொள்ளப்பட்டு, சிம் கார்டுகள் வழங்குவது நடைமுறைபடுத்தப்பட்ட சட்டம். ஆனால், அப்படியும் செல்போன் சிம் கார்டுகள் சில பல தவறானவர்களின் கைகளுக்கு சென்று விடுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, இனி வரும் காலங்களில் சிம்கார்டு வாங்குபவரின் கை ரேகை, விழித்திரை புகைப்படம் ஆகியவை கேட்கப்பட வேண்டும் என்று, சிம்கார்டு விற்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் செல்போன் சேவைத் துறையில் கடும் போட்டிகள் நிலவி வருவதால், இது நடை முறைக்கு சாத்தியப்படுமா என்று, செல்போன் சேவை நிறுவனங்கள் மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
0 Responses to தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்போன் சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயம்!: மத்திய அரசு அறிவிப்பு