Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தால்  பணி  நீக்கம் செய்ய வகை செய்யும்  புதிய சட்டம் பிப்ரவரி மாதம் அமலுக்கு வர உள்ளதாகத் தெரிகிறது.

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை மத்திய அரசின் பெண்கள், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.

அதில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகார் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியை பணி  நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள் இடம்பெற்று உள்ளன.

அதே போன்று செக்ஸ் புகார் என்று கொடுக்கப்பட்ட புகார் பொய் புகார் என்று  நிரூபிக்கப்பட்டால், புகார்  கொடுத்தவருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும், பணி நீக்கம் உள்ளிட்ட  வகை தனடனையும் வழங்கப்படும். இவை வரைவு மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில், தொழிலாளர், வேலை வாய்ப்பு, சிவில்  கிரிமினல் சட்ட விதிகளில் 5 ஆண்டுகள் அனுபவமுள்ள சமூக சேவகர் ஒருவர் இடம் பெற வேண்டும் என்றும் அந்த வரைவு மசோதாவில் சிறப்பு அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com