Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

 மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெருவெற்றி பெறுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டத்துக்கான வேட்பு மனுவை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் கட்சியாக ஏகோபித்த ஆதரவுடன்  பல ஆண்டுகளாக இருக்கிறது. எமது வெற்றி நிச்சயம். அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் காணப்படுகின்ற அதிகாரத்தினை எப்படி வடக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றிகளின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தப்போகின்றது என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். நிச்சயமாக ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்.

அத்தோடு, 13வது திருத்த சட்டத்திற்கு அப்பலான தீர்வு குறித்து தொடர்ச்சியான பேச்சுக்களை அரசாங்கத்துடன் மேற்கொள்வோம். அதற்கான காலம் இருக்கிறது. அதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை முழுமையாக உறுதிப்படுத்திவிட்டு எமது இலக்குகள்- தீர்வுகள் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவெற்றி பெறுவோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com