Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பிரித்தானியா காடிஃப் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கைத் தமிழருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். என்று வெளியான செய்தியில் உண்மை எதுவும் இல்லை. கொழும்பில் உள்ள நீதவான் யாருக்கு எதிராவும் ஒரு சர்வதேச பிடியாணைப் பிறப்பிக்கலாம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையான் என்று முடிவெடுக்க வேண்டியது சர்வதேசப் பொலிசாரே(இன்ரர் போல்).

குறிப்பிட்ட இந்த இளைஞருக்கு எதிராக கொழும்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், இதனால் சர்வதேசப் பொலிசார் இந்த இளைஞரை தேடிவருவதாகவும் சில இணையத்தளங்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் செய்தி வெளியாகியிருந்தது. ஒரு மைதானத்துக்குள் கொடியுடன் ஓடினால் சர்வதேசப் பொலிசார்(இனரர் போல்) தேடுவார்களா என்ன ? இது எந்த ஊர் நியாயம் ? இன்ரர் போல் பொலிசாரின் இணையத்தளப் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட இளைஞரது விபரங்கள் தேடப்படும் பட்டியலில் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

0 Responses to புலிக்கொடியுடன் ஓடியவருக்கு பிடியாணை: ஒரு பொய்யான செய்தி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com