Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


எமது தேசத்தின் தடைநீக்கிகளாகவும், எதிரிக்கு நெருப்பாகவும், எமது இனத்திற்கு தென்றலாகவும் இருந்த கரும்புலிகளின் நினைவு கூரலும் வணக்க நிகழ்வும் பிரான்சில் 06.07.2013 சனிக்கிழமை பி.பகல் 3.30 மணிக்கு பிரான்சின் பூசி சென் அன்துவான் பிரதேசத்தில் நினைவு கூரப்பட்டது.

கடற்கரும்புலி மேஐர் ஈழவீரனின் சகோதரனும், கடற்புலி சுதர்சினி அவர்களுடைய சகோதரியும் ஈகைச்சுடரினையும், மலர் வணக்கத்தையும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் மலர்வணக்கத்தையும் செய்திருந்தனர். செவரோன், சேர்ஐpபொன்துவாஸ், திறான்சி மாணவிகள் கரும்புலி நினைவுப் பாடல்களுக்கும், மாவீரர்பாடல்களுக்கும், எழுச்சிப்பாடல்களுக்கும் நடனம் வழங்கியிருந்தனர். மாவீரர் நினைவுரையை திரு. அகிலன் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. சுரேஸ் அவர்களும் வழங்கியிருந்தனர்.

கரும்புலிகள் என்பவர்கள் பலவீனமான எமது இனத்தில் பலமானதொரு சக்தி என்றும் இவர்கள் யாரும் அல்ல கொடுமைகளையும், அநியாயங்களையும் கண்டு பொறுக்க முடியாது தம்மை ஆயுதமாக பொது எதிரியின் பெரும் படையை தடுத்தவர்கள்.

உலகத்தில் இது போன்ற செயற்பாடுகள் பயங்கவாதமாக பார்க்கப்படுகின்றது. எமது போராட்டத்தைப் பொறுத்தவரை இது தவிர்க்க முடியாததொரு செயற்பாடாகவே பார்க்கப்பட்டது. தன் இனத்திற்கு தன் சந்ததிக்காக ஒரு மனிதன் செய்யக்கூடிய அதி அற்புதமான தியாகம் ஈகம் கரும்புகள் செய்திருக்கின்றார்கள்.

எதிரியும், எதிரிக்கு துணைபோனவர்களும் இன்றும் பயங்கொள்ளும் அற்புதமானவர்கள் எங்கள் கரும்புலிகள் இவர்கள் எமது குழந்தைகள், எமது பிள்ளைகள், எமது நண்பர்கள், எமது சொந்தங்கள், எமது உற்றார் உறவினர்கள் எனவே இவர்களை வணக்குவது எமது கடமை இவற்றை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. இவர்கள் எண்ணங்களும் இவர்கள் போன்று மண்ணில் விதையாகிப்போனவர்களின் எண்ணங்கள் நிறைவேற துஞ்சாமல் துவளாமல் உலகத்தமிழர் அனைவரும் பாடுபட வேண்டும் எனக்கூறப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

0 Responses to பிரான்சில் கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com