தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது, சென்னை முதன்மை நீதிமன்றம் பிறப்பித்து இருந்த பிடிவாரண்ட் உத்தரவை, நீதிமன்றமே இன்று ரத்து செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த நேர்காணலில், தமிழக முதல்வர் பற்றி அவதூறாக பேசியதற்காக, விஜயகாந்த் மீது சென்னை முதன்மை நீதிமன்றத்தில், விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு ஒன்றை தமிழக அரசு தொடர்ந்தது.
இதில் கடந்த 1ம் திகதி நேரில் ஆஜராக வேண்டிய விஜயகாந்தால், சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே, விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், விஜயகாந்த் அதே நாளில் நாகர் கோயில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் இருந்ததால், அவரால் சென்னை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜராக முடியவில்லை.
இனி, விஜயகாந்த் தவறாமல் ஆஜராகிவிடுவார். எனவே, அவரது பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதன்மை அமர்வு நீதிபதிகள், இந்த வழக்கின் உண்மை சரியான முறையில் எடுத்து வைக்கப்பட்டு இருப்பதால் பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்கிறோம் என்று அறிவித்து உள்ளனர்.
0 Responses to தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் உத்தரவு ரத்து!:சென்னை முதன்மை நீதிமன்றம்