Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா-பாகிஸ்தான்  எல்லையில் பாக்.ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. இதே போன்று பயங்கரவாதிகளின் ஊடுருவல்களும் அதிகரி்த்த வண்ணம் உள்ளன.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்திய எல்லையில் பாக்.ராணுவத்தினர் அத்துமீறி புகுந்து, இந்திய வீரர்களின் தலையை துண்டித்து எடுத்துச்சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாக்.எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியி்ல் சக்கந்தாபாத் அருகே , இந்திய நிலைகள் மீது பாக்.ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக் கிச் சூடு நடத்தினர். இதில் இந்திய ஜவான்கள் 5 பேர் பலியாகினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா-பாக். அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கப் படுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்தன. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற கோர சம்பவம் எல்லையில் நடந்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள், எல்லைகட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய நிலைகள் பகுதியில் இந்திய  ஜவான்கள் வழக்கமான ரோந்துப் பணியினை மேற்கொண்டிருந்தனர். 

அப்போது தான் பாக். ராணு வத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பயங்கரவாதிகளும் துணை போயிருக் கலாம் என தெரிகிறது. பலியான 5 வீரர்களும், பீகார் மாநிலத்தின் 21-வது ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த வர்கள் என்று தெரிவித்துள்ளன.

0 Responses to பாக். ராணுவம் திடீர் தாக்குதல் - இந்திய ராணுவத்தை சேர்ந்த 5 பேர் வீர மரணம் : எல்லையில் பதற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com