Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாறாக உதட்டளவில் மட்டுமே ஊடக சுதந்திரம் பற்றி பேச்சுக்களை பேசிக்கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 வெலிவேரிய மக்கள் போராட்டத்தின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் செய்தி சேகரிக்க கூடியிருந்த ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தன்னுடைய கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், சர்வதேச நியமங்களுக்கும், இலங்கை ஜனநாயக உரிமைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படியும் ஊடகவியலாளர்கள் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

 சர்வதேச ரீதியில் ஊடகச் சுதந்திரம் சம்பந்தமான சுட்டியில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. அத்தோடு ஊடக சுதந்திரம் மிகவும் கேவலமாக மதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பதன் இருப்பையே கேள்விக்குறியாக்கி ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்துவிடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to ஊடகவியலாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com