தெற்கு மத்திய இந்தோனேசியாத்
தீவொன்றில் அமைந்துள்ள எரிமலை ஒன்று சனிக்கிழமை காலை திடீரென வெடித்துச்
சிதறியதில் இரு குழந்தைகள் உட்பட 6 பொது மக்கள் கொல்லப் பட்டதாக அந்நாட்டு
அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 4.27 மணிக்கு வெடிக்கத் தொடங்கிய றொக்கட்டென்டா என்ற இந்த எரிமலை 2000 மீற்றர் உயரத்துக்கு புகை மூட்டத்தைக் கக்கியதாக இந்தோனேசியத் தேசிய அனர்த்த முகாமை அமைப்பின் பேச்சாளர் சுட்டோப்போ புர்வோ நுக்ரோஹோ அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்காரா மாகாணத்தில் உள்ள பலுவே தீவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. இது திடீரென வெடித்ததால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாகவே 6 பேர் கொல்லப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது இத்தீவில் வசித்து வரும் மக்களை எரிமலையிலிருந்து குறைந்தது 6Km தூரம் தள்ளியிருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சுமார் 10 000 குடிமக்களைக் கொண்டிருக்கும் பாலுவே தீவு இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து கிழக்கே 2000 Km தொலைவில் அமைந்துள்ளது. ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் உலகின் மிக அபாயகரமான எரிமலைகளையும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படக்கூடிய வலயத்திலும் இந்தோனேசியா அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ஆக்டோபர் 2012 இல் இந்தோனேசியாவின் லோக்கோன் எரிமலை வெடித்தது மிகப் பெரிய அனர்த்தமாகக் கருதப்படுகின்றது.

0 Responses to இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது:6 பேர் பலி