Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்வர்ணசித்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலின் மீது நேற்று சனிக்கிழமை குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் தனது கவலையை தெரிவித்துள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதை மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசலின் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளிட்ட மத- மார்க்க நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, எல்லா இன- மத மக்களும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அத்தோடு, இலங்கையில் அனைத்து மக்களுக்கும் தாம் விரும்பிய மதத்தையோ- மார்க்கத்தையோ பின்பற்றும் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

0 Responses to இலங்கையில் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்:அமெரிக்கா அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com