Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரீசில் இடம்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார் விபத்து தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இங்கிலாந்து இராணுவவீரர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு இக்கொலை தொடர்பில் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

டயானா இறந்து 16 வருட காலப்பகுதியில்  அவரது கார் விபத்து தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும், தகவல்களும் வந்து போன நிலையில்,  டயனாவின் கொலைக்குப் பின்னால் இங்கிலாந்து விமானப்படையின்  கொமாண்டோப் பிரிவின் சதி உள்ளது. இங்கிலாந்து இராணுவத்தின் குறிசூட்டு வீரர் ஒருவர் இக்கொலைக்குப் பின்னால் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட 31 நாள் பாரீசில் நடந்த கார் விபத்தில்  இங்கிலாந்து இளவரசி டயானாவும் அவரது நண்பருமான டுடி பயேட்டும் வாகனச் சாரதியும் மரணமடைந்திருந்தார்.

இதுகுறித்து லண்டன் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் சி.என்.என் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

0 Responses to இளவரசி டயானவின் மரணத்திற்குப் பின்னால் இங்கிலாந்து இராணுவம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com