மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் யார்
இவர்கள்? இந்த நாடு எங்கே இருக்கிறது? இந்து மகா சமுத்திரத்தில் தென்
ஆபிரிக்கா அருகில் இருக்கும் சிறு தீவு இது. மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள்
1820ளில் பிருத்தானிய, பிரான்சு காலனித்த்துவ ஆட்சியாளர்களால்
மொரிஷியஸ், ரியுனியன் தீவுகளுக்கு தொழிலாளர்களாக அழைத்த்து வரப்பட்டவர்கள்.
இந்த தீவுகளை வலம்பெற செய்தவர்கள் தமிழர்கள்.
யாழ் மாவட்ட அளவில் உள்ளதே இந்த மொரிஷியஸ் தீவு.
அவர்களுக்கும் ஈழத்த்தமிழர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? ஏன் அவர்களுக்கு இந்த பற்று?
தமிழினம் என்ற தேசிய இனம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும், தாங்கள் வெறும் அந்நியர்களின் கூலிகள் அல்ல என்ற உணர்வுடன் தமிழ் மொழி, தமிழ் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாழ்பவர்கள் இவர்கள்.
அவர்கள் தமிழை எங்களை போல் பேச முடியாவிட்டாலும், புலம் பெயர்க்கப்பட்டு 193 வருடங்களின் பின்னும், தமிழ் கலாச்சார பற்றும், தமிழ் மொழி பற்றும் நிறைந்தவர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும், ஈழத் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என்றும் எமது தேசியத் தலைவரின் மேல் பாரிய பற்றும், தமிழீழ விடுதலை போராளிகளை மாபெரும் தமிழ் இனப்பற்றுளவர்களாக, மொழி பற்றுளவர்களாக அவர்கள் தலை வணங்குகிறார்கள்.
இதில் முக்கியமாக நான் நேரில் பட்ட அனுபவத்தை சொல்ல வேண்டும், 1993களில் என்று நினைக்கிறேன், மொரிஷியஸ் நாட்டில் ஆட்சியில் இருக்கும் வட இந்திய வம்சாவளிகள், அந்த நாட்டில் இருந்த பணத்தாள்களில் முதல் இடத்தில் இருந்த தமிழ் மொழியை மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளி புது தாள்களை வெளியிட முயற்சித்தார்கள், அதை எதிர்த்து தமிழர்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினார்கள், மொரிஷியஸ் நாடு கொந்தளித்த்து கொண்டு இருந்தது.
நாடெங்கும் ஊர்வலங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்வலங்களில் கோஷமாக எழுப்பபட்ட கோஷங்களில் முக்கியமானது ஒன்று 'பணத்தாள்கள் முன்பு இருந்தது போல் இருக்காவிட்டால், தமிழை பாதுகாக்க எங்கள் அண்ணன் வருவார்' என்று கோஷம் இட்டார்கள். அவர்கள் அன்று மனத்தில் வைத்து கூறிய அண்ணன் எங்கள் தேசியத் தலைவர்.
இந்தியாவில் இருந்து குடியேறி 193 ஆண்டுகளுக்கு பின்பும் தமிழ் பற்றும், தமிழன் என்ற அந்த உறவை மட்டும் வைத்து கொண்டு தொலை தூரத்தில் வாழும் இந்த மக்களின் பற்று எமது போராட்டத்தின் நீதி தன்மையை வலியுறுத்துகிறது.
முப்பது ஆண்டு கால தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும், போராளிகளை இழிவு படுத்தும் அரசியல் தலைவர்கள் இன்று எம்மண்ணில் இருந்து கொண்டு தாம் அரசியல் செய்வதாக கூறி தமிழீழ விடுதலை போராட்டத்தை வன்முறை என்றும், போராட்டத்தை கொச்சை படுத்தும், மாவீரர்களை இழிவு படுத்தும் சில அரசியல் தலைவர்கள் இருக்கும் நிலையில், இந்த அரசியல் தலைவர்களால் தான் எமது இளைஞர்கள் ஆயுதம் எந்தினார்கள் என்பதை மறந்து பேசும் இந்த சில அரசியல் தலைவர்கள் இருக்கும் போது, இந்த அரசியல் தலைவர்களை தலையில் தூக்கி வைத்து போற்றும் சில புலம் பெயர் அறிவுஜீவிகள் இருக்கும் போது, இவர்கள் இருக்கும் நிலையில் எமது போராட்ட நியாயங்களை எம்மால் வலுவாக எடுத்து கூற முடியாத நிலையில் நாம் இருக்கும் போது மக்களை மதிக்க தக்க, போராட்ட நீதியை மதிக்க தக்க இந்த தமிழ்கள் போற்ற பட வேண்டியவர்கள்.
அதே நேரத்த்தில் மொரிஷியஸ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கான நினைவு சின்னம் வைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தை பற்றியும் அதன் சூழலை பற்றியும் சில வார்த்தைகள் கூற வேண்டும். Rosehill Plaza என்ற இடம் மொரிஷியஸ் நாட்டு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான நினைவு தளம்.
அந்த இடத்திலேயே சிலம்பு என்று கூறப்படும், அந்நாட்டுக்கு வந்து அந்த நாட்டை வலுப்படுதித்திய தமிழ் மக்களுக்கான நினைவு சின்னம் இருக்கிறது.
அதன் பக்கத்திலேயே இரண்டாவது நினைவு சின்னமாக தமிழீழ மக்களுக்கான நினைவு தூபி நிறுவப்பட்டத்துள்ளது.
'வாழ்க தமிழ், வாழ்க தமிழ் தேசிய இனம், வாழ்க தமிழீழம்'
தமிழீழம் உருவாகும்.
- இறைவன்

0 Responses to மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் யார் இவர்கள்?