Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:
திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள்.

நமது முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவர்களது வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

எல்லாருக்கும் நல்லது செய்யும் முதல்வர் அவர்கள் தலைவா பிரச்சனையிலும் தலையிட்டு விரைவில் தமிழகமெங்கும் தலைவா வெளிவர ஆவண செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையாக காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

1 Response to முதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்: விஜய் சுட சுட அறிக்கை

  1. Unknown Says:
  2. kiss up began

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com