டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதை கட்டுப்படுத்த, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்தும் வகையிலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்கவும் மத்திய அரசு எடுக்கும் உறுதியான நடவடிக்கைகளை விளக்கி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கைத் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், 'டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவதால், இந்திய பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த மத்திய அரசு பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்ட்ட தங்கம், வெள்ளி எண்ணெய் பொருட்கள், மற்றும் அத்தியாவசியம் அல்லாத பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இறக்குமதி வரி உயர்வு எவ்வளவு என்பது நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.' என்று மத்திய நிதி அமைச்சர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




0 Responses to ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க தங்கம்-வெள்ளி இறக்குமதி வரி உயர்த்தப்படும் : ப.சிதம்பரம்