இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்கு எண்ணங்களைக் கொண்டவர் என்று சிங்கப்பூரின் தந்தையும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தோமஸ் பிளேட், லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். குறித்த நூலிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றியும், இலங்கையின் இறுதி மோதல்களுக்கு பின்னரான தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றியும் லீ குவான் யூ தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். (Prof. Thomas Plate, Citizen Singapore: How To Build A Nation – Conversations with Lee Kwan Yew, Marshall Cavendish, 2011)
இலங்கையில் சிங்களவர்கள் இருக்கின்ற காலம் தொட்டு தமிழர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அங்கு சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழ்நிலை இன்னும் இல்லை. இலங்கையில் தமிழர்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். அதன் மூலம் இலங்கையின் இனமுரண்பாடுகள் தீர்க்கப்பட்டு விட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்லி வருகிறார். அதையே, மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், தமிழர்கள் சிங்களவர்களுக்கு பயந்து ஒதுங்கிவிட மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்கள கடும்போக்காளர். அவரின் எண்ணங்களை மாற்றவோ, திருத்தவோ முடியாது. விடுதலைப் புலிகள் தற்போது இல்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழர்களை என்றைக்குமே சிங்களவர்களினால் தோற்கடிக்க முடியாது. யாழ்ப்பாண தமிழர்கள் என்றாலே சிங்களவர்களுக்கு பயமே மிஞ்சுகிறது. அதனாலேயே, அவர்களை அடக்கி ஒடுங்க முயற்சிக்கிறார்கள் என்றும் லீ குவான் யூ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.




0 Responses to மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குடையவர் : சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ விமர்சனம்