Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடிநீர் உரிமைகளுக்காக போராடிய கம்பஹா வெலிவேரிய மக்களின் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் உள்ளிட்ட வன்முறைகளை எதிர்த்து ‘எதிர்ப்பு அலை’ என்கிற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு போராட்டமொன்றை நாளை புதன்கிழமை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், நல்லாட்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்குமாறு கோரியுமே எதிர்ப்பு அலை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக நாளை புதன்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் எதிர்ப்பு அலை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறினார். அத்தோடு, கொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எதிர்ப்பு அலை போராட்டம் நாளை முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to வெலிவேரிய வன்முறைகளை கண்டித்து எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு அலை’ போராட்டம் நாளை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com