Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது பொதுமக்கள் காணாமற்போயுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று அரசாங்கம் மறுத்துள்ளது.

ஆனாலும், மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் பற்றி கண்டறியும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றியும் விசாரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காணாமற் போனவர்கள் தொடர்பில் முடிவுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரிலேயே அந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கும், எதிர்காலத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கும் சம்பந்தமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனவர்கள் பற்றி கண்டறியும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு வடக்கு- கிழக்கில் மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் பற்றியே விசாரிக்கும் என்று கூறிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, இறுதி மோதல்களின் போது பொதுமக்கள் காணாமற்போனதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக தெரிவித்தார்.

0 Responses to இறுதி மோதல்களில் பொதுமக்கள் காணாமற்போகவில்லை: இலங்கை அரசாங்கம் திட்டவட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com