Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இளவயது திருமணங்கள் புரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) அறிக்கையிட்டுள்ளது. அதனால் பாலியல் குற்றங்களின் அதிகரிப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு கூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி சுட்டியில் பின்நிற்கிற மாவட்டங்களிலேயே இளவயது திருமணங்களும், 

சட்டபூர்வமான கற்பழிப்புச் சம்பவங்களும் (திருமண வயதை அடையாதோருக்கான திருமணம் உள்ளிட்ட) அதிகரித்துக் காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென ‘இளவயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள்’ பற்றி கண்டறியும் யுனிசெப்பின் குழுவொன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இளவயது திருமணங்களினால் பெண்கள் கல்வியை சீராக பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள யுனிசெப்பின் குழு, கர்ப்ப காலத்தில் பெண்களும்- தாய்மாரும் அபாயத்தை எதிர்கொள்ளும் சூழலும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றது. தாய்மை அடைவதற்கான முழுமையான உடற்தகுதியையும்- உறுதியையும் அடையாத இளவயது திருமணங்களிலேயே உயிரிழப்புக்கள் அதிகமாக நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெப்பின் ஆய்வுக்குழு நடத்திய பரிசோதனைகளின் போது கலந்து கொண்ட 71 இளவயது தாய்மாரில் 21 பேர் (30 சதவீதம்) 18 வயதை அடைவதற்கு முன்னரே கர்ப்பம் தரித்திருந்தனர். இது, இலங்கையின் இளவயது திருமணங்கள் பற்றிய சராசரியை விட 20 சத விகிதம் உயர்வானது. போதிய அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வுகள் அற்ற நிலையினாலேயே இளவயது திருமணங்களும்- பாலியல் குற்றங்களும் அதிகரித்து காணப்படுவதாகவும் யுனிசெப் அறிக்கையிட்டுள்ளது.

0 Responses to இலங்கையில் இளவயது திருமணங்களும், அதன் சார்பு பாலியல் குற்றங்களும் அதிகரிப்பு: யுனிசெப்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com