Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சொல்வதற்கில்லை, மும்பை நீர் மூழ்கி கப்பல் தீ விபத்துக்கு நாச வேலை கூட காரணமாக இருக்கலாம் என்று கப்பல் படைத் தளபதி ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று அதிகாலை மும்பையில் டீசலில் இயங்கிக் கொண்டிருந்த நீர் மூழ்கி கப்பல் ஒன்றில் தீப்பிடித்து, 18 பேரின் நிலைமை என்னவென்றேத் தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக அவர்கள் உயிர் பிழைத்து இருக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்திய கப்பற்படை தளபதி ஜோஷி அங்கு ஆய்வு நடத்திய பின்னர், தீ விபத்துக்கான கரணம் என்னவென்றே தெரிய வில்லை.

இருந்தாலும், கண்டிப்பாக சொல்வதற்கில்லை என்றாலும், இந்த தீ விபத்துக்கு ஒரு வேலை நாச வேலைகள் கூட காரணமாக இருக்கலாம் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விபத்து குறித்து 4 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோணியும் இதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மும்பை நீர் மூழ்கி கப்பல் தீவிபத்துக்கு நாசவேலை கூட காரணமாக இருக்கலாம்:ஜோஷி விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com