Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.பல்கலைக்கழகம் இராமநாதன் நுண்கலைக் கழக மாணவர்கள் தடைப்பட்டிருக்கும் தமக்கான விரிவுரைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இன்று நண்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டமானது மால 4.30 மணிவரைக்கும் நடைபெற்றது.

தமக்கான நீதி வழங்கும்வரைக்கும் தாம் தொடர்ச்சியாக போராட்டத்தினை நடாத்த உள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக இராமாநாதன் நுண்கலைக் கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பு துறையின் 2ஆம், 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் கடந்த 23 ஆம் திகதியில் இருந்து விரிவுரைகள் எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்தே மாணவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 Responses to யாழ் இராமநாதன் நுண்கலைக் கழக மாணவர்கள் தமக்கான விரிவுரைகளை ஆரம்பிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com