Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்இ காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடைபெற்றால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள பட்டினிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது

இந்திய– இலங்கை கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்று கூறிஇ நமது நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்குவதும்இ அவர்களின் வலைகளை அறுத்தெறிவதும்இ அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களை கவர்ந்து செல்வதும்இ அவர்களை மிக கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்துவதும்இ பிறகு அவர்களை இலங்கைக்கு கடத்திச் சென்று சிறையில் அடைப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? என்றுதான் நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம்இ ஆனால் பதில் இல்லை. இப்போதுதான் முதல் முறையாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள தாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். அது உண்மையானால்இ கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறொரு நாட்டின் தலைநகருக்கு மாற்றினால்தான் இந்தியா பங்கேற்கும் என்று கூற வேண்டும்.

இதுதான் சட்டக் கல்லூரி மாணவர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கையாகும்.

எனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இது எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது.

மாணவ சமுதாயம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளே தலைமையாகும். அதையே உறுதியாக பற்றிக்கொண்டு போராட வேண்டும் என்றும்இ அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

1 Response to ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

  1. Unknown Says:
  2. EVERY TAMILNADU TAMILS STUDENTS AFTER 5YEARS OLD ALL STUDENTS ARE MUST TO SUPPORT TO THEIR AND TO MAKE TOO BIG DEMONSTRATION MANY TIMES WITH IN THIS HOLIDAYS!!!!...WE DON`T WANT TO DO ANY CRIMINAL OR FIGHTING AGAINST TO ANYONE ARE IT TOO SO ALL THE PARENTS ARE TOO WITH THEM CHILDREN
    TO JOINT TO TOGETHER MUST TO DO IT WE CAN GET IT ONE OUR OWN TAMILS NADU FOR TAMILS TAMILEELAM MY DEAR LOVELY OUR OWN TAMILS NADU TAMILS STUDENTS AND THE OUR TAMILS NADU TAMILS PARENTS AND ALL TAMILS PEOPLES!!!!... IT IS OUR OWN MOST IMPORTANT OWN DUTY MY DEAR LOVELY OUR OWN TAMILNADU TAMILS PEOPLES!!!!....

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com