Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கம்பஹா வெலிவேரிய பகுதி மக்கள் தமது குடிநீர் உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினரைக் கொண்டு துப்பாக்கி பிரயோகம் செய்து அடங்கியமை மன்னிக்க முடியாத குற்றம்.

அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளரும், மொழிகள் துறை அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச நெருக்கடிகள் இலங்கை அரசுக்கு எதிராக எழுந்துள்ள காலகட்டத்தில், அதுவும் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அரசுக்குள் இருந்து கொண்டே இலங்கை மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்களா? என்கிற அச்சத்தை இவ்வாறான வன்முறை சம்பவங்கள் உணர்ந்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிவேரிய பகுதி மக்களின் கிணறுகளில் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேறும் இராசாயனக்கழிவுப் பதார்த்தம் ஒன்று கலப்பது தொடர்பான முறைப்பாடுகள் அண்மைக்காலமாக தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் உரிய முறையில் எடுத்திருக்கவில்லை. அப்படி நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டி வந்திருக்காது என்றார்.

அத்தோடு, வீதியில் இறங்கி போராடிய மக்களை நோக்கி இராணுவத்தினர் ஏன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். அதற்கான ஆணையை யார் வழங்கியது? குறித்த துப்பாக்கி பிரயோகத்தினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் யார் ஆணையில் நடைபெற்றது என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அதற்கான பொறுப்பை அவரே ஏற்கவேண்டி இருக்கும் என்று வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வெலிவேரிய வன்முறைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com