வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை
துண்டாடும் முயற்சிகளுக்கு என்றைக்குமே ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு அரசாங்கம் துணை போகாது என்று ஊடகத்துறை அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல
தெரிவித்துள்ளார். நாட்டை துண்டாடும் அதிகாரங்கள் எங்கிருந்தாலும் அதனை
அனுமதிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது. நாட்டின் ஒருங்கிணைவும்,
தேசிய பாதுகாப்புமே அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்ட விடயங்களை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
முப்பது வருடங்களுக்கும் அதிகமான காலம் நீடித்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் மீண்டும் பிரிவினை கோரும் சக்திகளின் போக்கில் நாட்டை கையளிக்க தயாராக இல்லை. எனவே, வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ்- காணி அதிகாரங்களை எந்த காரணத்தைக் கொண்டும் வழங்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல் சர்வதேசத்துக்கு புதிய செய்திகளைச் சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டை துண்டாடும் அதிகாரங்களை அரசாங்கம் அனுமதிக்காது : ஹெகலிய ரம்புக்வெல