Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித் ஜாதியினரை பட்டியல் இனத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தான் 1995 ஆம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா. தலித் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து இதனைக் கோரிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தில் இருந்து பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு செல்லும் தலித்துக்கள் பட்டியல் இனத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைத் தழுவுவோர் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் வருவதில்லை.

தலித் மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு காரணமாக இந்து தலித்துக்களுக்கும், மதம் மாறிய தலித்துக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது.

அதனால் சமூகத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், தனிமைப்படுத்தப்படுகிறோம் என்ற எண்ணம் சிறுபான்மை சமூகத்திடம் அதிகமாகியுள்ளது என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கிடைக்குமாறு வழி செய்யப்பட்டால் மதமாற்றம் அதிகரிக்கும் என்று வலதுசாரி இந்து அமைப்புக்கள் கூறுகின்றன.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து போன்ற மாநிலங்களிலும், மும்பை, டில்லி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் பல உயர்கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுகின்றன. இந்த இடங்களில்கூட தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை என தலித் கிறிஸ்தவ செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர்.

0 Responses to "தலித் கிறிஸ்தவர்கள் எஸ் சி பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும்" : ஜெயலலிதா பிரதமரிடம் வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com