Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும், எனவே மாநில அரசுகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த  வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

கடந்த வாரமே மத்திய உளவுத் துறை, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான வருகிற 15ம் திகதி, தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபடலாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

குறிப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கவுஹாத்தி ஆகிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாநில அரசுகள், இந்த நகரங்களின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

 சென்னையின் முக்கிய இடங்கள், மற்றும் சென்னை விமான நிலையம் போன்றவற்றில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுஎன்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடலாம் : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com