மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் வீதி அபிவிருத்தி என்கிற பெயரில் சீனாவின் ஒத்துழைப்போடு இராணுவ குடியேற்றங்களை அமைக்கும் திட்டத்தினை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகள் மற்றும் வளவுகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தொடர்ந்தும் அறிவிக்கப்படுகின்ற போதிலும், வலிகாமத்தில் 6 500 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டத்தின் வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை தந்திரமாக கையகப்படுத்தும் அரசாங்கம், அந்த காணிகளில் ஒரு இலட்சம் இராணுவ குடும்பங்களுக்கான குடியேற்றங்களை அமைக்க சீனாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.




0 Responses to சீனாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் இராணுவ குடியேற்றங்கள்:எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு