Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கவுதம புத்தர் நகரில் உள்ள மசூதியின் சுற்றுச் சுவரை இடிக்க உத்தரவிட்டதாக, அம் மாவட்ட துணை ஆட்சியரான துர்காவை  உத்திரப் பிரதேச அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது.

எனினும் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாஃபியா கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்ததால் அவர்களுடைய அழுத்தத்தினாலேயே துர்கா பதவியிழந்திருப்பதாக பல்வேறு தரப்பினால் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக தலையிடுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம எழுதியிருந்தார்.

இந்நிலையில் துர்கா செய்தது குற்றமே. அமைதியாக இருந்த அப்பிரதேசத்தில் எந்தவித உத்தரவும் இன்றி தன்னிச்சையாக அம்மசூதிக்குச்சென்று சுவரை இடித்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்படும் அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், உத்தர பிரதேச அரசு குற்றம் சாட்டியுள்ளது.

உத்தர பிரதேச அரசு, துர்காவுக்கு வழங்கியிருக்கும் குற்றப்பத்திரிகை நகல் 10 பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. இந்த குற்றப்பத்திரிகையின் நகல் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த  குற்றப்பத்திரிகையில்,"மசூதி கட்டப்பட்டுள்ள கிராமத்தில் எந்த பதற்றமோ, மத ரீதியான மோதல் ஏற்படும் சூழலோ இல்லை. எனவே, மசூதி சுற்று சுவரை இடித்த விஷயத்தில் துர்கா சட்டப்படி செயல்படவில்லை. பிரச்சனை இல்லாத போதும் கூட அவர் அந்த கிராமத்துக்கு சென்று இருக்கிறார். அவருக்கு எந்த நிர்வாகத் திறமையும் இல்லை. அவரால் எந்தவித மத மோதலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச அரசு கொடுத்த குற்றப்பத்திரிகையை துர்கா பெற்றுக் கொண்டார். 15 நாட்களுக்குள் பதில் அளிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவைப் பொறுத்தே துர்காவின் பணியிடை நீக்கம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்நிலையில் உள்ளூர் புலனாய்வு தகவல்களின் படி, குறித்த மசூதியின் சுவர் இடிக்கப்பட்ட போது கௌதம புத்தர் நகருக்கு துர்கா பிரசன்னமே ஆகவில்லை எனவும், சேர்க்கிளில் பணியில் இருந்த இருந்த அதிகாரி ஜேவர் என்பவின் உத்தரவின் படியே மசூதி சுவர் இடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதேவேளை இவ்விவகாரத்தை விசாரிப்பதற்காக வக்ஃப் வாரிய கமிட்டி கிராமத்திற்கு சென்று விசரித்த போது, கிராம வாசிகளும் அதே போன்று துர்கா சம்பவ இடத்திற்கு வரவே இல்லை எனக்கூறியுள்ளனர்.

0 Responses to 'மசூதி இடிப்பு நிகழ்விடத்திற்கு மாவட்ட துணை ஆட்சியர் துர்கா வரவே இல்லை?'

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com