Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முப்பது ஆண்டுகளாக நீண்ட மோதல்களிலிருந்து போராடி விடுவித்துக் கொண்ட இலங்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பிரிவினையை தூண்டி துண்டாட முயற்சிக்கிறார். அவரின் எண்ணங்களுக்கு இங்கு இடமில்லை என்று பொது பல சேனா தெரிவித்துள்ளது.
 இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான விடயங்களை சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் நவநீதம்பிள்ளையை நீதியான இராஜதந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட  அத்தே  ஞானசார  தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 குறிப்பாக, இலங்கைக்கான உத்தியோக பயணத்தை மேற்கொண்டு வரும் நவநீதம்பிள்ளை மோதல்களுக்கு பின்னரான வடக்கு- கிழக்கை பார்வையிட்டு அது தொடர்பில் நீதியும், நியாயமுமான அறிக்கைகளை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், அவரின் எண்ணங்களை இலங்கையை துண்டாடுவதாகவே இருந்து வருகிறது என்றார்.

இலங்கை மீது சர்வதேசத்தின் எவ்வாறான அழுத்தங்கள் வழங்கப்பட்டாலும் மீண்டுமொரு யுத்தமோ- பிரிவினை வாதமோ தோற்றுவிக்க இடமளிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நவநீதம்பிள்ளை இலங்கையை துண்டாட முயற்சிக்கிறார்: பொது பல சேனா குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com