வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலங்களில் சிவில் நிர்வாக
நடவடிக்கைகளில் இராணுவத்தினை ஈடுபடுத்துவதனை தடுக்குமாறு தேர்தல்கள்
ஆணையாளரை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கேட்டுக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், மக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தேர்தல் காலத்தில் அரசாங்கம் நீதியற்ற செயல்களை இராணுவத்தினைக் கொண்டு மேற்கொள்ளலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும், எனவே இராணுவத்தினை சிவில் நடவடிக்கைகளிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு ஜே.வி.பி கோரியுள்ளது.
வடக்கில் நீண்ட காலத்துக்குப் பின்னர் நடத்தப்படுகின்ற தேர்தல் என்கிற வகையில் மக்கள் அச்சுறுத்தல்கள் அற்ற நிலையில் வாக்களிக்க வேண்டிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தினதும், தேர்தல்கள் செயலகத்தினதும் கடமை என்றும் அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

0 Responses to வடக்கில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம்: ஜே.வி.பி கோரிக்கை