வருகிற 15 ம் திகதி சுதந்திர தின விழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.
தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.மேலும் முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுதந்திர தின விழா, நாளை மறுநாள், ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாட நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் சேலம் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்கிலும், தொடர்பு இருப்பதாக கூறப்படும் போலீஸ் பக்ரூதின் உட்பட 4 தலைமறைவு தீவிரவாதிகள் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இவர்களால் சென்னை, புதுவை, கோவை, திருச்சி, திருப்பூர், நாகை ஆகிய ஊர்களுக்கு தீவிரவாதிகளால் தாக்குதல் ஆபத்து இருப்பதாகவும், மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரித்து உள்ளனர்,
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், சுதந்திர தின பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தமிழக டிஜிபி ராமானுஜம் தலைமையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.




0 Responses to சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்!