Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இயக்குனர் சேரனின் மகள் தாமினி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார். நீதிமன்றத்துக்கு இயக்குனர் சேரன் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

கடந்த மூன்று நாள் கவுன்சிலிங்குக்கு பிறகும், இயக்குனர் சேரனின் மகள் தாமினி, காதலன் சந்துருவுடன் செல்லவே விருப்பம் என்று தெரிவித்து இருந்ததால், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்.

ஆனால், 18 வயது நிரம்பி விட்ட தாமினியை சட்டத்துக்கு புறம்பாக காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்  என்று சந்துருவின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகல் 2 மணிக்கு தாமினியை காவலர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதன் படி, காவலர்கள் தமினியை பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போதும் தாமினி தனது காதலனுடன் செல்லவே விருப்பம் என்று நீதிபதிகளிடம் கூறியதால், இந்த வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், தாமினி அதுவரை மூத்த வழக்கறிஞர் பிரசாத்தின் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்றத்துக்கு சேரன் தமது மனைவியுடன் வந்திருந்தார். மகளை பார்த்தவுடன் இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to சேரனின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்:காதலனுடன் செல்ல விரும்புதாக தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com