Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய எல்லையான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நுழைந்து மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, முக்கிய எதிர்கட்சியான பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று அதிகாலை இந்திய எல்லையான காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எதிர்பாராமல் நுழைந்து, அங்கு பாதுகாப்பு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தின் பதற்றம் தனிவதற்குள்ளாகவே, பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில், இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, முக்கிய எதிர்கட்சியான பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று காலை மீண்டும் அத்துமீறி துப்பாக்கிசூடு!;இது குறித்த பேச்சு வர்த்தைக்கு பிரதமர் பாஜக தலைவர்களுக்கு அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com