Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


வன்னியர் சமுதாயத்தினரையும், பாமக தலைவர்களையும் அவதூறாகப் பேசியதற்காக நடிகர் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று வந்தவாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முக்கூர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசுகையில், மருத்துவர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு அங்கு திரண்டு வந்த பாமகவினர் மேடை அருகே சென்று ஆனந்தராஜுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து எழுந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வன்னியர் சமுதாயத்தினரைப் பற்றியும், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குறித்து கடுமையாக பேசியதாக தெரிகிறது.

இவர்களது இந்த விமர்சனத்தை கண்டித்து மாவட்ட பாமக தலைவர் சீனிவாசன் தலைமையில் பாமகவினர் முக்கூர் சுப்பிரமணியம், ஆனந்தராஜ் ஆகியோர் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

0 Responses to வன்னிய சமுதாயத்தினரை இழிவாக பேசிய நடிகர் ஆனந்தராஜ் மீது பொலிசில் புகார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com