மோதல்கள் முடிவுக்கு வந்து 4 வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையும், அதன் தலைவர் வே.பிரபாகரனின் பெயரையும் உச்சரிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் அரசியல் செய்ய முடியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட காணி சுவீகரிப்பு ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொங்கிரீட் கார்பெட் வீதிகளை வடக்கிலும்- கிழக்கிலும் அமைத்துவிட்டால் சமாதானம் வந்துவிட்டதாக அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால், உண்மையான நிலைமை அப்படியில்லை. உரிமைக்காக போராடிய தமிழ் மக்களின் வரலாறு முள்ளிவாய்க்காலில் முடிவற்று நிற்கிறது. காணி என்பது பொது மக்களின் அடிப்படை உரிமை. அதிலும், தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் திட்டமிட்டு அபகரிப்பதை என்றைக்குமே ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.




0 Responses to பிரபாகரனின் பெயரை உச்சரிக்காமல் அரசாங்கத்தினால் அரசியல் செய்ய முடியாது: பா.அரியநேத்திரன்