தடையையும் மீறி விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் இன்று அயோத்தி நோக்கி
சங்கல்ப யாத்திரை எனும் மாபெரும் பேரணியை நடத்த முயற்சித்து வருகின்றனர்.
பாபர் மசூதி - ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோரி இந்த யாத்திரைக்கு வி.எச்.பி அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், பாஜக பாராளுமன்ற உறுப்பினர் அதித்யானாத், எம்.எல்.ஏ லாலு சிங் உள்ளிட்ட 340 பேரை உத்தர பிரதேச காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆதித்யனாத் கொண்டாவிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அயோத்தி முழுவதும் கடுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம், இந்த யாத்திரையை ஒத்த 84 கோசி யாத்திரை என ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டதும், எனினும் அது தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to விஷ்வ இந்து பரிஷித்தின் அயோத்தி யாத்திரை : 340 பேர் கைது : பரபரப்பு அதிகரிப்பு