கிராமப்புற ஏழை, எளிய, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பட,
கிராமப்புறங்கள் தோறும் ஊராட்சி வறுமை ஒழிப்புக் குழுவினர் அமைக்கப்
படுவார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமங்களில் ஏழைகள், மற்றும் ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகளை கண்டு பிடித்து, அவர்கள் வாழ்வு மேம்படும் வகையில் தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு மூலம் ஊராட்சி வறுமை ஒழிப்பு குழுவினர் அமைக்கப் படுவார்கள் என்றும்,
இதற்கென ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 10 லட்ச ரூபாய் என்று நிதியுதவி வழங்கப்படும் என்றும்,இந்த வறுமை ஒழிப்பு குழுவை முதற்கட்டமாக நாகை,திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அமல் படுத்தப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கிராமப்புற வறுமை ஒழிப்புக் குழுவினரின் பணியால் கிராமப்புற ஏழைகள், மற்றும் ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை மேம்படும் என்று தாம் நம்புவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 Responses to கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட ஊராட்சி வறுமை ஒழிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் : ஜெயலலிதா