தூத்துக்குடி கயத்தாறில் கட்டபொம்மனின் 214
வது நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க., பொதுச் செயலர்
வைகோ பங்கேற்றுப்பேசினார்.
அவர், ‘’ இங்கு போலீசாரின் கெடுபிடியை மீறி, ஏராளமானோர் திரண்டுள்ளீர்கள். இங்கு வந்தவர்களுக்கு, போலீசார் தடைகளை ஏற்படுத்தினர்.
கட்டபொம்மன்
ஜாதி தலைவரா, கட்சி தலைவரா... சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரது
நினைவு தினத்தில் கூட்டம் நடத்த, போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கிராமங்களில் உளவுத்துறையினர் சென்று, "கட்டபொம்மன் நினைவு தினத்திற்கு
வாகனங்களில் சென்றால், வழக்கு பதிவு செய்வோம்' என, மிரட்டி உள்ளனர்.
தமிழக
அரசின் குறைகளை, ஒரு சதவீதம் தான் பேசியுள்ளேன். குறை சொல்ல வேண்டுமானால்,
இன்னும் 99 சதவீதம் உள்ளது. நான், அமைதியாக சென்று கொண்டிருக்கிறேன்.
தேவையில்லாமல், என்னை சோதிக்க வேண்டாம். கெடுபிடிகளை விதிக்கும்
போலீசாருக்கு, எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில்,
இது போல் நடந்து கொள்ள வேண்டாம்’’என்று ஆவேசமாக பேசினார்.
0 Responses to நான் அமைதியாக சென்று கொண்டிருக்கிறேன்; என்னை சோதிக்க வேண்டாம்: வைகோ