Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள் இன்றாகும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில் கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப் படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில்,

2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப் படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.

தமிழீழ தேசியத் தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப் பகுதிகள் ஊடாக கரடுமுரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத் தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக் கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்கள்- அவர்களின் விபரம் வருமாறு:
லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)
லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)
மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)
மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி/திருமகள் (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)
கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)
கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)
கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)
கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)
கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)
கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்)






0 Responses to “எல்லாளன் நடவடிக்கை” கரும்புலி மறவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com