Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கினில் தொடரும் இராணுவப்பிரசன்னம் சுமுகமான சிவில் செயற்பாடுகளிற்கோ ஜனநாயக வழி தேர்தல்களிற்கோ அனுமதிக்கப்போவதில்லையென எச்சரித்துள்ளார் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து.நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தல் கண்காணிப்பு பணிகளினில் ஈடுபட்டிருந்த  தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தனது உத்தியோகபூர்வ அறிக்கையினை மும்மொழிகளினிலும் இன்று யாழ்ப்பாணத்தினில் வெளியிட்டு வைத்துள்ளது.

அறிக்கையினை வெளியிட்டு அங்கு உரையாற்றிய பாக்கியசோதி சரவணமுத்து மேலும் தெரிவிக்கையினில் இராணுவ பிரசன்னம் மற்றும் அரச ஆதரவு கட்சிகளது ஏனைய கட்சிகளிற்கு எதிரான வன்முறைகள் மத்தியினிலேயே இத்தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது.இத்தகைய வன்முறைகள் மற்றும் கெடுபிடிகளிற்கிடையேயும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை தாண்டி வாக்களித்து தமது தலைமையினை தெரிவு செய்த வடக்கு மக்கள் பாராட்டுக்குரியவர்களே.

ஆனாலும் இத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளினில் 7.5 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை வாக்களிப்பு பற்றிய அறிவூட்டலை தேர்தல் திணைக்களம் மக்களிற்கு வழங்க தவறிவிட்டதை காட்டிநிற்கின்றது.ஆனாலும் வாக்கு எண்ணும் நிலையங்களினில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படாமை போன்றவை இம்முறையும் தொடர்கின்றமை கவலைக்குரியது.

தேர்தல் வன்முறைகள் மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பான இந்த அறிக்கை தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்கள் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச ராஜதந்திரிகளென அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

எனினும் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இவ்வாறான தேர்தல் கண்காணிப்பு அறிக்கைகள் வெளியிடப்படுகின்ற போதும் அவை என்ன பலாபலனை தருகின்றதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான அறிக்கைகள் மூலம் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களை நடத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவித்தார்.

0 Responses to இராணுவப்பிரசன்னம் சிவில் செயற்பாடுகளை பாதிக்கின்றது!! தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com