வடக்கு மாகாண சபைக்கான தலைமையகம் இன்று மத கிரியைகளுடன் திறந்து
வைக்கப்பட்டுள்ளது. கைதடியினில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்தின்
முதலாம் தள வேலைகள் தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையினில் எதிர்வரும்
வெள்ளிக்கிழமை 25ம் திகதி முதலாவது கன்னி அமர்வு இடம்பெறவுமுள்ளது. அதற்கு
ஏதுவாக தற்போது தயாராகவுள்ள கட்டிடத்தொகுதியினில் முதலமைச்சர்
சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையினில் மத அனுட்டானங்கள் இன்று காலை
இடம்பெற்றது.வடமாகாணசபையின் செயலாளர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள்
இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் கட்டிட வேiலைகள்
பூர்த்தியாகும் வரை முதலமைச்சர் அலுவலகம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள
தற்காலிக அலுவலகமொன்றினிலேயே இடம்பெறவுள்ளது.
0 Responses to தயாரானது வடமாகாண சட்டசபை! (படங்கள் இணைப்பு)