வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் நடைபெற்ற தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான அறிக்கை 2014ஆம்
ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின்
கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தில்
நிறைவேற்றுப் பணிப்பாளரும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான
நிலையத்தின் நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தயாரித்துள் அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியசோதி சரவணமுத்து இன்றை ஊடகவியலாளர் மாநாட்டில் சமர்ப்பித்த ஊடக அறிக்கை:
வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தின் முழுமையான மீள் திரும்பங்களுக்கான சாத்தியத்தையும் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்பவற்றை கருத்தில் கொண்டு இந்தத் தேர்தல் தேசியளவிலும் சர்வதேச அளவிலும் வரவேற்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் சபையின் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை பெற்று கொண்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்று கொண்டது. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 7.5 வீதம் நிராகரிக்கப்பட்டதுடன், வாக்களிப்பு வீதம் 67.52 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களின் போது தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 27 கடுமையான சம்பவங்களும், 57 சிறு சம்பவங்களையும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (தே.வ.க.நி) பதிவு செய்தது அநேகமான சம்பவங்களில் இனம்காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.மு) கட்சியோடு தொடர்புபட்டவர்களே.
தேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட்ட 34 கடுமையான சம்பவங்களில் 13 சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக ஐ.ம.சு.மு. இனம் காணப்பட்டது. 18 சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களின் கட்சி தொடர்புகள் இனம் காணப்படவில்லை.
பொது மக்களது நாளாந்த வாழ்க்கையிலான இராணுவ மயப்படுத்தலில் அளவு தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்களித்தல் நடைபெற்ற சூழல்களிலும் ஊடுருவி நிலை நாட்டப்படிருந்தமைக்கு சான்று பகிர்ந்தன.
இராணுவ மயப்படுத்தல் தேர்தல் செயன்முறைகளுக்கு தெளிவாகவே குந்தகம் ஏற்படுத்தியது. எனினும் மொத்த வாக்களிப்பு வீதமும் அதன் பெறுபேறும் ஓர் பிரசித்தமான எதிர்தாக்கத்தையே எடுத்துரைத்தது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலும் இராணுவத்தை அகற்றுவதாக சொல்லப்பட்டுள்ளது. தே.வ.க.நி இந்த பரிந்துரையை எந்த தயக்கமும் இன்றி அங்கீகரிப்பதுடன் அதனை அமுல்படுத்துவதற்கும் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றது.
சில செய்தி தளங்களுக்கு தடை ஏற்படுத்தியமை மற்றும் தவறான தகவல்களை பிரசுரித்தமை என ஊடகங்கள் மீது இடப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் தே.வ.க.நி கரிசனை கொள்கிறது.
வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படாமையையிட்டு நாம் மிகுந்த வருத்தத்துடன் கவனத்தில் கொள்கின்றோம். தேர்தல் செயன்முறைகளை கண்காணிக்கும் சிவில் சமூகத்திற்கு இது முக்கிய தடையாகும்.
உள்ளூர் கண்காணிப்பாளர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கு ஆணையாளர் மற்றும் அரசியல் வாதிகளையும் கேட்டுக் கொள்வதுடன், சர்வதேச நியமங்களுடன் அவர்களது வகிபாகம் மற்றும் செயற்பாடுகளில் தெளிவான மற்றும் முழுமையான விளக்கத்துடன் தேர்தல் சட்டங்களில் அவர்களுக்கான அங்கீகரித்த்தலுக்கும் இணக்கமளிக்கவும்.
அச்சுறுத்தல்களையும் மற்றும் மிரட்டல்களையும் தைரியமாக எதிர்கொண்டு தங்களது வாக்குரிமையை அப்பியாசிப்பதற்கும் ஏனைய பல சாவால்களையும் வெற்றி கொண்டு பெரும் எண்ணிகையில் திரண்டு வந்த வடமாகாண வாக்காளர்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகின்றோம்.
தேர்தல் செயன்முறைகளின் நேர்மை தன்மைக்கு குந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இறுதி முடிவுகள் வாக்களர்களின் ஒட்டு மொத்த அபிலாசைகளையே பிரதி பலித்தது.

0 Responses to வடக்கு தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும்: பாக்கியசோதி சரவணமுத்து