ஐந்து முக்கியமான
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரளான
போராட்டம் 15. 10. 2013 செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு பண்ருட்டி வேல்முருகன் தலைமை தாங்கினார்.
இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் அக்கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன்.

இந்திய
அரசே, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே!
இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் நாட்டில் காலடி வைக்காதே போன்ற முழக்கங்கள்
இப்போராட்டத்தின் போது முன்வைக்கப் பட்டது.
சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட வேண்டும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது எனவும், இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

0 Responses to இந்தியாவே காமன்வெல்த் மாநாட்டை புறக்கணி! தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்!