இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா
புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை
இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அரசியல்
கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று நான் ஏற்கனவே கடந்த மார்ச் 25-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
இதுதொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கைக்கு அது ஊக்கம் அளிப்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இதன்மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும். கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கனடா பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 Responses to கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!