Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக காணப்பட்ட கனேடிய தமிழர் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி முதல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

தே நெசனல் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

37வயதான பிரதீபன் நடராஜா என்ற இந்த கனேடிய தமிழர், அமெரிக்க மாவட்டட நீதிமன்றம் ஒன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட அடிப்படையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதேகுற்றச்சாட்டுக்காக வோட்டலூ சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற கனேடிய தமிழர் இந்த மாதம் 28 முதல் குறைந்தது 15வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்காக ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகனை கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூவர் குறைந்தது 25 வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவும், பிரதிபனும் 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்திய கிபிர் ரக விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக 500 ஏகே 47 துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பிரதீபன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்டார்.

0 Responses to விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட மற்றுமொரு கனேடிய தமிழருக்கு சிறைத்தண்டனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com