இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா தொடர்ந்தும் உதவ வேண்டும் என்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்
தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசு ஆக்கபூர்வமா செயற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழு, தமிழ்நாட்டின் சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகளைச் சந்தித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேசினார். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்திய இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கும் உதவிகள் முழுமையாக சென்று சேர்வதில்லை என்று குறிப்பிட்ட இரா.சம்பந்தன், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கும் நோக்கில், 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் எண்ணத்தை அரசாங்கம் முழுமையாக கைவிடவில்லை என்றார்.

0 Responses to தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க இந்தியா தொடர்ந்தும் உதவ வேண்டும்: இரா.சம்பந்தன்