இஸ்லாமிய மார்க்கத்தின்படி உணவு தரத்தினை தீர்மானித்து வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் நடைமுறைக்கு எதிராக பௌத்த அமைப்பான பொதுபலசேனா கொழும்பில்
இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளது.
அது, கண்டி தலதா மாளிகையை சென்றடைந்ததும் விசேட சமய வழிபாடுகளுடன் நிறைவடையும் என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழுக்கு எதிரான போராட்டங்களை பொதுபலசேனா கடந்த காலங்களிலும் மேற்கொண்டது. அப்போது, ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைப்பதாக முஸ்லிம் அமைப்புக்கள் உத்தரவாதம் அளித்தன. ஆனால், அந்த உறுதி மொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு மீண்டும் உணவுப் பொருட்களுக்கான ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுகிறார்.
உறுதிமொழிகளை மீறியமையை அடுத்தே ஹலாலுக்கு எதிரான பேரணியை தாம் ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கை சிங்கள பெளத்த நாடு. இங்கு உணவு வகைகளுக்கு ஹலால் சான்றிதழ் அவசியமில்லை. எனவே எமது நாட்டிலிருந்து ஹலால் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஹலாலுக்கு எதிரான பொதுபலசேனாவின் பேரணி கொழும்பில் ஆரம்பம்; கண்டியில் நிறைவடையும்