ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்காக எப்போதுமே ஆர்வத்துடன் இந்தியா செயற்படும். அதனூடு இலங்கை அரசியலில் ஏற்படும் நிரந்தரத் தன்மையானது, தெற்காசிய
அரசியலுக்கு பலம் சேர்க்கும் என்று இலங்கைக்கான இந்தியத்தூதர் வை.கே.சின்ஹா
தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக இலங்கை அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்தும். அதனூடு இனப்பிரச்சினைகளுக்கான தீர்வினை வேகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இந்தியத் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கான நல்லெண்ண செயற்படாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கின் முதலமைச்சர் பதவியேற்றுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ண, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காணும் பொருட்டே ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளார். அதில் பங்களிப்பு செய்யாமல் வெளியிலிருந்து கருத்து தெரிவிப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. பாராளுமன்ற தெரிவுக்குவில் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐக்கிய இலங்கையை உருவாக்க இந்தியா ஆர்வத்துடன் செயற்படும்: இந்தியத்தூதர் வை.கே.சின்ஹா