தமிழீழ தேசிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு பிரான்சு வாழ் மக்களால்
நவம்பர் 27ம் நாள் லெப். கேணல் நாதன். கப்டன். கஐன், கேணல் பரிதி அவர்கள்
துயில்கின்ற கல்லறையில் சரியாக நண்பகல் 12.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி
வைக்கப்பட்டது. அதே சமநேரத்தில் லூ புசே என்னும் இடத்தில் பொதுச்சுடர்
ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்
தலைவர். திரு. யோசேப் அவர்கள் ஏற்றி 12.40 தேசியக்கொடியேற்றல் இடம் பெற்றது
தேசியக்கொடியினை பிரான்சின: கிளைப்பொறுப்பாளர் திரு. சி. பார்த்திபன்
அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின்
மாவீரர்நாள் உரையும், தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை வாசிக்கப்பட்டது.
சரியாக 13.35 மணிக்கு மணியோசை ஒலிக்க மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம் பெற்றன. அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது. ஈகைச்சுடரின் முதற்சுடரினை மாவீரர் அன்பு அவர்களின் சகோதர் ஏற்றிவைக்க சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் ,ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம் பெற்றது தாயகவிடுதலைப்போரில் முதற்களப்பலியான மாவீரர் சங்கர் அவர்களின் கல்லறைக்கு பிரிகேடியர். சு.ப. தமிழ்ச் செல்வனின் சிறிய தாயாரும் மாவீரின் தாயார் மலர்மாலை அணிவித்தார். மாவீரர் பெற்றோர், சகோதரர்களுக்கு என விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமரவைக்கப்பட்டனர்.
மாவீரர் வணக்க நடனம் அதனைத்தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட கலைத்திறன் போட்டிகளில் ஒன்றான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவர் உரைகளும், எழுச்சிநடனமும் நடைபெற்றன. தொடர்ந்து பிரான்சில் மக்களின் குறைநிறைகளை ஆளும் அரசுவரை கொண்டு செல்லும் அதிகாரமிக்க மாநகரசபையின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழர்களின் முன்னெடுப்பில் முக்கியமான செவரோன் மாநகர முதல்வர், லாக்கூர்னோவ் முதல்வர் மற்றும் கிளிச்சி முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் கொம்னியுஸ் கட்சி தலைவியுமாகிய தமிழருக்காக தொடர்ந்து உறுதியாக குரல் கொடுத்து வருபவர்களின் முக்கியமாக இருக்கும் திருமதி. மரியா Nஐhர்ஐ; புஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றியிருந்தார். அனைவருடைய உரையும் தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்ச்சி மேலிட்டவகையில் தெரிவித்திருந்தனர்.
மண்டபம் மக்களால் நிறைந்தும் மாவீரர்களின் கல்லறைகளும், காட்சிகளும் நிகழ்வுகளும் எல்லா மக்களின் மனங்களும் தாயகத்து மாவீரர்களின் நினைவுக்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது ஓர் உணர்ச்சிமயமான சூழலையும் நிலையையுமே ஏற்படுத்தியிருந்தது. தமிழீழ மக்கள் மட்டுமல்ல பிரென்சு மக்களும், குர்திஸ் போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கூட கண்கள் குழமாகி பேச்சற்ற நிலையில் இருந்ததை காணக்கூடி யாதாக இருந்தது. ஆண்டு தோறும் எமது குழந்தைகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழர் கலைபண்பாட்டுகழகத்தினால் பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, சித்திரம், தனிநடிப்பு, போன்ற போட்டிகளிலில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மாவீரர் பெற்றோர், சகோதரர்கள் முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கத்திலான புலிச்சின்னம் வழங்கப்பட்டு வருகின்றது. அதனை மாவீரர் குடும்பத்தினரே வழங்கி மதிப்பளிக்கின்றனர். அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினதும், தொடர்ந்து விடுதலையின் வலிமைக்கு நடனரீதியாக வலுச்சேர்த்து வரும் நடனமாணவிகளதும், ஆசிரியர்களினது வரலாறு என்கின்ற நாடகமும், நடனமும் இடம் பெற்றது. வெண்திரையில் காட்சிகளும் மேடையில் நடனமுமாக நடைபெற்றது. மூத்த பெரியவர் தனது பேத்திக்கு தமிழரின் வரலாற்றை கூறிவருதாகவே இது அமைக்கப்பட்டது. ஆரம்பமாக தமிழரின் புலிக்கொடிக்கு உரித்தான சோழமகராசனின் காலம் அதற்கு பிற்பாடு அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினம், சிங்களத்தின் கபடத்தனமான ஆட்சி அதிகாரம் தமிழர்களின் சாத்வீகப்போராட்டம், அதன் பிற்பாடு தமிழினத்தின் வரலாறு 1000 வருடங்களுக்கு பின்னர் தந்த தன்மானத்த தமிழன், சூரியத்தேவன் தமிழீழ தேசியத் தலைவரின் பிறப்பு ஆழக்கடலில் சோழமகராசன் பாடல் நடனமாக வழங்க தொடர்ச்சியாக அரவணைக்க வேண்டிய இந்திய தேசம் அமைதிபடையாக வந்து அது சிங்களத்தின் சூழ்ச்சியால் ஆக்கிரமிப்புப் படையாக மாறியதும் மாறாத வடுக்களும் இந்திய இராணுவ புண்ணியவான்களால் பாடல் நடனமூலமும், தூங்கிக்கிடந்து துவண்டது போதும் தமிழா, சிறீலங்கா அதிபர் மகிந்தா நடைபெற்று முடிந்த காமன்வெல்த் மாநாட்டில் தமிழர்கள் பிரச்சனை முடிந்து சந்தோசமாக வாழ்வதாகவும் இங்கு பிரச்சனையில்லை வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தான் பிரச்சனை என்று கூறியதை நடிப்பாலும் புலம் பெயர்ந்த மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இளைஞர் யுவதிகளும் சொல்ல எமது நிலம் எமக்கு வேண்டும் என்கின்ற பாடலுக்கும் மாணவிகள் எழுச்சி நடனம் வழங்கினர்.
முப்பரிமாணமாக நடைபெற்ற இந்தக் கோர்வையில் நமது நாளைய சந்தி வரலாற்றை சரியாக ஆதாரத்துடன் கண்களாலும், காதாலும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் இம்முயற்ச்சியும், மாணவர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பும் ஒரு நம்பிக்கையும், பதிவு செய்திருந்ததை நிகழ்வு முடிவுற்றதும் மக்களின் கருத்தாக அமைந்திருந்தது. தமிழீழ தேசியக்கொடியிறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரக மந்திரத்துடன் மாவீரர் நாள் நிகழ்வு சரியாக 7.50 மணிக்கு நிறைவுகண்டது.
கடுமையான குளிருக்கு மத்தியிலும் மண்டபத்திற்கு வெளியிலும், உள்ளேயும் மக்கள் மாவீரர் திருவுருவப்படத்திற்கு தமது வீரவணக்கத்தைச் செலுத்துவதற்கு பிற்பகல் 6.00 மணிவரை நின்றிருந்தனர். பாரிசின் முக்கிய புகையிரத நிலையம் நண்பகல் 1.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தமிழ் மக்களாலேயே நிரம்பி வழிந்ததாக செய்திகள் கிடைத்தன. பிரான்சின் காவல் துறை மிகுந்த பாதுகாப்பை பல வழிகளில் உதவிகளை வழங்கியிருந்தனர். அவர்களின் கணிப்பின் பிரகாரம் 20.000 ( இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டதாக கூறியிருந்தனர். ) ஏறக்குறைய 22.000 ( இருபத்தி இரண்டாயிரம் மக்கள் கலந்து கொண்டனர் ).

0 Responses to பிரான்சில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)