Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தற்;காலிக ஊழியர்களாக கடமையாற்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதியவர்களை வேலைக்கு நியமித்ததன் காரணமாக வேலை இழந்த பதினேழு பேரும் இன்று வெள்ளிக் கிழமை மீண்டும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை பல்கலைக்கழக வாசலில் ஆரம்பித்துள்ளார்கள்.

உண்ணாவிரதம் இடம் பெற்ற வேலையில் குறிப்பிட்ட உண்ணாவிரத்ததை நிறுத்தக்கோரி கோப்பாய் பொலிசாரும் மற்றும் தொழில் திணைக்கள அலுவலர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஊழியர்களுக்க வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறி பல்கலைக்கழக பதிவாளர்களினால் எழுத்து மூலம் 21.10 2013 ல் கடிதம் வழங்கிய போதிலும் இது வரையும் எந்த வகையான முன்னேற்றகரமான செயல்பாடுகளும் இடம் பெறவில்லையெனத் தெரிவித்து இந்த உண்ணவிரதப் போராட்டதை அடையாளமாக இன்று ஆரம்பித்துள்ளார்கள்.

உண்ணாவிரதம் இடம் பெறும் இடத்திற்கு அண்மையாக கோப்பாய் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் இராணுவ புலனாய்வாளர்களும் காணப்படுகின்றார்கள்.இன்று பல்கலைக்கழகத்தின் செனற்சபை கூடும் நிலையில் உரிய நடவடிக்கைகளை மனிதாபிமான ரீதியாக எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் எதிர் பார்க்கின்றார்கள்.

0 Responses to யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழியர்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com