சில செய்திகள் எங்களை உடனடியாக பதற்றப்படுத்துகிறது. அப்படியொரு செய்தியாகத்தான் சகோதரர் ‘மகா தமிழ் பிரபாகரன்’ கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட விடயமும் எங்களுக்கு கிடைத்தது. முதலில் பதற்றப்படுத்தியது. இப்போது, இயலாமை உணர்வுகளோடு கவலை கொள்ள வைக்கிறது.
இலங்கையின் உள்ளக சட்டங்கள் மற்றும் யதார்த்த நிலைமைகளைத் தெரிந்து கொண்டு மகா தமிழ் பிரபாகரனை சுற்றுலா வீசா அனுமதியில் ஊடக களப் பணிகளுக்காக அனுப்பியது யார்? அப்படி யாரும் அனுப்பவில்லை. அது அவரது சுயாதீன முடிவுதான் என்றால்; அவரை இவ்வாறான முடிவொன்றை எடுக்கத் தூண்டியது யார்? அந்த நபர்கள் இலங்கையிலோ- தமிழ்நாட்டியோ கூட இருக்கலாம். அந்த உசுப்பேற்றலைச் செய்தவர்களுக்கு இலங்கையின் யதார்த்த களம் புரியாதா? (இல்லை. ஒட்டுமொத்தமான முடிவும் சகோதரருடையதுதான் என்றால், ஏன் அவர் அவசரப்பட்டார்? என்று புரியவில்லை)
மகா தமிழ் பிரபாகரன், ஊடகப்பணிகளுக்கான வரவில்லை. சுற்றுலா திட்டங்களோடு தான் வந்தார் என்பது உண்மையாக இருக்கலாம். அதில் பிரச்சினையில்லை. ஆனால், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் குடிவரவு குடியகல்வு சட்டங்கள் எவ்வளவு உன்னிப்பான கவனிப்பை செய்கின்றன என்பது புரியாதா? அல்லது அதில் ஏன் இவ்வளவு அசண்டையீனம்.
ஏற்கனவே சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கை வந்த அவுஸ்திரேலியா- நியூஸிலாந்து பசுமைக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஊடக சந்திப்பொன்றை நடத்த முயன்றார்கள் என்ற காரணத்துக்காக உடனடியாக நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். அதுபோல, அண்மையில் கவிஞர் நடிகர் ஜெயபாலனின் கைது, நாடு கடத்தல் விவகாரமும் ஊர் அறிந்தது.
இவ்வாறான உதாரணங்கள் ஏற்கனவே எங்களின் கண் முன்னால் இருக்கின்றது. அப்படியிருக்கிற போது மகா தமிழ் பிரபாகரனை உந்தித் தள்ளியவர்கள் பொறுப்பற்ற தன்மையோடு இருந்திருக்கிறார்கள். எதிர்காலத்திலாவது புரிதலற்ற இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள் உறவுகளே.
நாங்கள் இங்கிருந்து கொண்டு அவர்களுக்காக கவலை கொள்ள மாத்திரம் தான் முடியும். இப்போதைக்கு வேறு ஒன்றையும் எங்களால் செய்ய முடியாது. பல நேரங்களில் எங்களை தர்மசங்கடப்படுத்துகிறீர்கள்; நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்படுங்கள்!
இலங்கை ஊடக பரப்பிலே பணிபுரியும் புருஜோத்தமன் தங்கமயில் தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது தொடர்பில் மேற்கண்டவாறு ஆதங்கப்பட்டிருந்தார். இந்த ஆதங்கத்தை அலட்சியமானதாகவோ அல்லது இலங்கை அரசு சார்ந்த ஒரு கருத்தாகவோ கருதுவதை விட்டு இலங்கை ஊடகப்பரப்பிலேயே இருக்கக் கூடிய இறுக்கங்களுக்கு மத்தியில் நின்று தமிழக ஊடகத்துறை சார்ந்த சகோதரனின் கைது தொடர்பான கவலையையும், அது தொடர்பிலே எதுவும் செய்ய முடியாத ஒரு கையறு நிலையின் விபரிப்புமாகவே நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இலங்கை என்றில்லாது ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்ற அனைத்து நாடுகளிலும் இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஊடக சுதந்திரம் உள்ளதாக சொல்லப்படுகின்ற நாடுகளில் கூட தங்களுடைய அரசாங்க நடவடிக்கைகளுக்கு குந்தகமான அல்லது இடையூறான ஊடகவியலாளர்கள் சொந்த நாட்டினராக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராகவும் இருந்தாலும் சரி கண்காணிக்கப்படுவதும், கைது விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் தாண்டித்தான் கள நிலை ஊடகப் பணியாளர்கள் எல்லைகளையும், தடைகளையும் கடந்து தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஊடகவியலாளர்கள் என்றில்லாது, சராசரியான மக்களினுடைய குடிவரவு, குடியகல்வு நடைமுறைகளிலேயே ஒவ்வொரு நாடும் தற்போது காட்டி வரும் இறுக்கம் என்பது மிக கடுமையானது. அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு காரணிகள் இதனை கட்டமைக்கின்றன. இது இப்போது மட்டும் நடக்கும் விடயமல்ல. காலம் காலமாகவே இருந்து வருகின்றது. இந்தியா, இலங்கை உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் தமிழர்கள் தொடர்பாக மேலும் சில இறுக்கங்கள் இருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலையின் பின்னதாக குறிப்பிட்ட சில பெயர்களை உடைய ஈழத்தமிழர்கள் உலகின் எந்த பகுதியிலிருந்து இந்திய விசாவுக்கு விண்ணப்பித்தாலும் அது இந்தியக் குடிவரவு, குடியகல்வு பிரிவினரால் நிராகரிக்கப்பட்டு வருவது பலரும் அறியாதது. அது போலவே, ஐரோப்பிய நாடுகளிலே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இந்திய விசாவை விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது கடினமானது.
புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமது தாயகத்திற்கு செல்ல விரும்பும் தமிழர்களில் குறிப்பிட்ட சில பெயர்களில் உள்ள ஈழத்தமிழர்கள் பலரும் இன்றளவும் தயக்கம் காட்டியே வருகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் மகா தமிழ் பிரபாகரன் எனும் பெயரில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்த போதே இவர், இலங்கை புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இருந்திருக்கலாம் என்பது ஊகிக்க முடியாத விடயமல்ல. அவ்வாறு இருக்கையில் இவருடைய இலங்கைப் பிரயாணம் தொடர்பிலே அவரோ, அல்லது அவர் சார்ந்தவர்களோ கொண்டிருக்காத ஒரு கவனத்தை, ஒரு அக்கறையை இறுக்கமான அந்த சூழலுக்குள் இருந்து இன்றளவும் பணியாற்றக் கூடிய ஒரு ஊடகத்துறை சார்ந்த ஒரு நண்பரின் ஆதங்கமாக, ஒரு இயலாமைக் குரலாகவே புருஜோத்தமனின் இந்தக் குறிப்பினை பார்க்கவேண்டிருக்கிறது.
இவ்வாறு கூறுவது தமிழக ஊடகவியலாளர்கள் இலங்கை களத்தில் ஊடகப் பணியாற்றக் கூடாது என்பதான நோக்கமல்ல. இது தொடர்பான செயற்பாடுகளில் இன்னமும் கூடிய அவதானமும், அக்கறையும் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே வலிறுத்தப்படுகிறது.
அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மகா தமிழ் பிரபாகரனை தன்னுடைய நண்பர் என்கிறார். அவரை ஊடகவியலாளர் என்று தனக்கு தெரியாது என்கிற பதிலையும் முன்வைத்திருக்கிறார். இருக்கலாம், ஆனால், இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் மற்றும் புலனாய்வு பொலிஸாரின் கண்காணிப்பு பற்றிய அனுபவங்கள் அவருக்கு நிறையவே இருக்கின்ற போது, அது தொடர்பிலான அறிவுறுத்தல்களை ஏன் சுற்றுலா வீசா அனுமதியில் வந்த மகா தமிழ் பிரபாகரனுக்கு வழங்காமல் விட்டார்? அது, மிகப்பெரிய தவறு.
இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட முடியும், மோதல்கள் உச்சம் பெற்றிருந்த காலம் முதல் இன்று வரையில் தமிழகத்தின் சஞ்சிகைகள் பல தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சுக்களின் அவதானிப்பைப் பெற்றிருக்கின்றன. அவற்றின் கட்டுரைப் பக்கங்கள் பல கிழிக்கப்பட்டே இலங்கையில் விற்பனைக்கு விடப்பட்டிருந்தன. குறிப்பாக, விகடன் மற்றும் ஜூனியர் விகடன் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.
ஜூனியர் விகடனுக்கு பேட்டியொன்றை வழங்கி புலனாய்வு பொலிஸாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுத்த அனுபவம் இலங்கையின் எதிர்த்தரப்பு அரசியல்வாதி அசாத் சாலிக்கு உண்டு. அவர், சிக்கல்களை எதிர்கொண்ட பின்னரே வெளியில் விடப்பட்டிருந்தார். நிலைமை அப்படியிருக்க, விகடன் குழும பத்திரிகையொன்றில் பணியாற்றிய அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட மகா தமிழ் பிரபாகரனின் வருகையை பாதுகாப்பு அமைச்சு மிக உன்னிப்பாகவே ஆரம்பத்திலிருந்து கவனித்திருக்கும். அந்த விடயம் தொடர்பில் ஏன் பொறுப்பானவர்கள் முதலிலேயே அறிந்திருக்கவில்லை? (அவர் ஏற்கனவே இலங்கை வந்து சென்று கட்டுரையொன்றை வேறு எழுதியிருப்பதாக தெரிகிறது?)
ஊடகவியலாளரான மகா தமிழ் பிரபாகரனின் கைதும், தற்போது புலனாய்வு பொலிஸாரின் இரண்டு நாட்களைத் தாண்டிய விசாரணையும் பல செய்திகளை சொல்கிறது. அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் குடிவரவு குடியகல்வு சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்திருக்கிறார். அப்படியான அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து இளம் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்ச்சியான சிக்கலுக்குள் மாட்டிவிடக் கூடாது. எதிர்காலத்திலாவது. இப்படியான விடயங்களில் அவதானத்துடனும், பொறுப்புடனும் சம்பந்தப்பட்டவர்கள் செயற்பட வேண்டும். அதுதான், அனைவருக்கும் நல்லது!
(இந்தப் பகுதி எழுதப்பட்டிருக்கும் போது எமக்கு கிடைத்த தகவலின் படி இரண்டொரு நாட்களில் மகா தமிழ் பிரபாகரன் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விசாரணைகளின் பின் அநேகமாக நாடு கடத்தப்படலாம் என்று தெரிகிறது.)
4தமிழ்மீடியா

0 Responses to மகா தமிழ் பிரபாகரன் கைது: ஆதங்கமும், வேண்டுகோளும்…!